இலங்கையை விட்டு மெல்ல நகரும் புரேவிப் புயல்..!! ஆனாலும் எச்சரிக்கையாக இருங்கள்..! பொதுமக்களுக்கு விடுக்கப்படும் அறிவுறுத்தல்.!

புரேவிப் புயல் காரணமாக இலங்கையில் பாரிய சேதங்கள், அனர்த்தங்கள் எதுவும் பதிவாகவில்லையென அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மரங்கள் முறிந்து விழுந்தமை, பலத்த காற்று, மழை பற்றிய அறிக்கைகளே கிடைத்துள்ளதாக அந்த மையம் தெரிவித்துள்ளது.
புரேவியின் தாக்கம் உள்ள பகுதிகளில் பலத்த காற்று மற்றும் பலத்த மழை தொடர்ந்து பதிவாகி வருவதாகவும், அந்த பகுதிகளிலுள்ள மக்களிற்கு உதவும் நடவடிக்கையில், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.

புரேவி புயல் இலங்கையை விட்டு நீங்கிச் சென்று விட்டது.அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்ட அறிவிப்பில் இது தெரிவிக்கப்பட்டுள்ளதுமன்னாருக்கும் பூநகரிக்கும் இடையிலான பிரதேசத்தின் ஊடாக மன்னார் விரிகுடாவிற்குள் நகர்ந்துள்ளது.அந்த நிலையத்தின் பிரதி பணிப்பாளர் பிரதீப் கொடிபிலி வெளியிட்ட அறிக்கையில்,வடக்கு, வட மத்திய, வடமேற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழை பெய்யும். எனவே பொது மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். மீன்பிடி சமூகம் மறு அறிவிததல் வரை கடலுக்குச் செல்லக்கூடாது.சூறாவளியின் விளைவாக கடுமையான தாக்கமோ சேதமோ ஏற்படவில்லை.இருப்பினும், சூறாவளியின் விளைவு முற்றிலுமாக நின்றுவிடும் வரை அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.புரேவியால் அன்றாட நடவடிக்கைகள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகளில் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணியாளர்கள், முப்படையினர் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.