சாதாரண தர பரீட்சை நடத்தப்படும் திகதியை அறிவித்தது கல்வி அமைச்சு..!!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடத்தப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். சாதாரண தர பரீட்சை மார்ச் மாதத்தில் நடத்தப்பட்டால், 3 மாத காலப்பகுதியினுள் அப்படி என்றால் ஜுன் மாதம் வரையில் பரீட்சை முடிவுகள் வெளியிட பரீட்சை திணைக்களத்தினால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.அதற்கமைய மார்ச் மாதம் பரீட்சை நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் அதனை தொடர்ந்து பிற்போட அவசியமில்லை என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.ஜுலை மாதம் முதல் உயர் தர வகுப்புகளை ஆரம்பிப்பதற்கு மாணவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கும் எதிர்பார்ப்பில் அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

2021 மார்ச் மாதத்தில் பரீட்சை நடத்துவதற்கு பொருத்தமான 9 நாட்கள் தொடர்பில் தீர்மானம் மேற்கொள்வதற்கு கல்வி அமைச்சு, சுகாதார அதிகாரிகள் மற்றும் ஏனைய உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடல் மேற்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.இதேவளை, கடந்த ஒக்டோபர் மாதம் இடம்பெற்ற உயர்தர பரீட்சை முடிவுகள் 4 மாதங்களுக்குள் வெளியிடப்படுவதாக பரீட்சை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.