யாழ்ப்பாண நகரில் களமிறங்கிய இராணுவத்தின் மோட்டார் சைக்கிள் கொமாண்டோ அணி..!!

யாழ்ப்பாண நகரப் பகுதியில் இன்றைய தினம் இலங்கை இராணுவத்தின் மோட்டார்சைக்கிள் கொமாண்டோ அணி களமிறக்கப்பட்டு சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.இந்த நிலையில் யாழ்ப்பாணம், கொழும்பு, கம்பஹா, களுத்துறை உள்ளிட்ட சில பகுதிகளில் ஊரடங்கு சட்டமானது கடுமையாகப் பின்பற்றப்பட்டு வருகிறது.இவ்வாறான சந்தர்ப்பத்திலேயே யுத்த காலத்தில் களமிறங்கிய மோட்டார்சைக்கிள் கொமாண்டோ அணியினர் மீண்டும் தற்போது கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக யாழ்ப்பாண நகரத்தில் களமிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஊரடங்கு சட்டம் நடைமுறையில் உள்ளபோதும் கட்டுப்பாடுகளை மீறி மக்கள் வீதிகளில் நடமாடியதுடன், அநாவசியமாக பலர் வீதிகளில் அலைந்த நிலையில் பொலிஸாரால்தனித்து கட்டுப்படுத்த முடியாத நிலையில் இராணுவ விசேட படைப்பிரிவு களமிறக்கப்பட்டிருக்கின்றது. எனவே, பொதுமக்கள் அவதானமாக நடந்து கொள்ளுவது சிறந்தது.பொலிஸாரைபோல் அல்லாமல் முதலில் தண்டணை பின்பே விசாரணை. எனவே அவதானமாக நடந்து கொள்வது மிகவும் சிறப்பானதாக அமையும்.