யாழில் பொழிந்து தள்ளிய பெருமழை..கடந்த 24 மணி நேரத்தில் 221.மிமீ.மழைவீழ்ச்சி பதிவு..!!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த 21 மணித்தியாலத்தில் 226.04 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.யாழ்ப்பாணம் பிராந்திய வளிமண்டல திணைக்கள பொறுப்பதிகாரி ரீ.பிரதீபன் இதைத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, யாழில் தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை மற்றும் காற்று காரணமாக தற்போதுவரை 459 குடும்பங்களை சேர்ந்த 1589 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.மேலும் 15 வீடுகளுக்கு முழு அளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், 141 வீடுகளுக்கு பகுதியளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், இதுவரை 4 இடைத்தங்கல் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.