இந்தியாவில் கோரத் தாண்டவமாடும் கொரோனா.!! கடந்த 24 மணித்தியாலத்தில் 1,553 பேருக்குத் தொற்று…!

இந்தியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 1,553 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு 36 பேர் உயிரிழந்துள்ளார்கள்.இந்நிலையில், கொரோனா பாதிப்பு பற்றி இந்திய மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், கொரோனா வைரசால் பலியானவர்களின் எண்ணிக்கை 543 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 2,547 பேர் குணமடைந்தும், 14,175 பேர் தொடர் சிகிச்சையிலும் உள்ளனர் எனத் தெரிவித்துள்ளது.

இதனால், இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 17,265 ஆக உயர்வடைந்துள்ளது.இந்தியாவில் அதிக அளவாக மராட்டியத்தில் 4,203 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இதுவரை 507 பேர் குணமடைந்துள்ளனர். 223 பேர் பலியாகியுள்ளனர் எனத் தெரியவந்துள்ளது.