வடக்கில் புரேவிப் புயலை எதிர்கொள்வது எப்படி? தயார் நிலையில் அனர்த்த முகாமைத்துவப் பிரிவு.! பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள விசேட அறிவுறுத்தல்.!!

யாழ்ப்பாணம் மாவட்ட மக்களுக்கு, மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அவசர வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளது.

புரவி சூறாவளி திருகோணமலை மற்றும் பருத்தித்துறைக்கிடையிலான முல்லைத்தீவினை அண்மித்த கடற்பரப்பில் இன்று இரவு 7.10 இற்கு தரைதொடும் என எதிர்பார்த்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.இந்தச் சந்தர்ப்பத்தில் காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 75 கிலோமீற்றர் முதல் 85 கிலோ மீற்றர் வரை வீசலாம் எனவும் வளிமண்டலவில் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.கடல் பிராந்தியங்களில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்வதால் மறு அறிவித்தல் வரை கடற்றொழிலில் ஈடுபட வேண்டாம் என மீனவர்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாண சூழ்நிலை காரணமாக மக்களின் அவசர தேவைகளுக்கு, அனர்த்த முகாமைத்துவ பிரிவின் அவசர செயல்ப்படுத்துகை மையத்தின் 24 மணிநேர தொலைபேசி இலக்கங்களான 0773957894 , 0212117117 எனும் இலக்கங்களுக்கு தொடர்பினை மேற்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிவித்தலை யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்து பிரிவின் உதவி பணிப்பாளர் ரீ.என்.சூரியராஜா விடுத்துள்ளார்.