முல்லைத்தீவிற்கு அண்மையாக இன்றிரவு கரையைக் கடக்கப் போகும் புரேவிப் புயல்..!! பொதுமக்களுக்கு விடுக்கப்படும் அபாய எச்சரிக்கை..!!

வங்கக்கடலில் உருவாகியுன்ன புரேவி புயல் முல்லைத்தீவுக்கு அண்மையாக கரையை கடக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.


இன்றிரவு 7 மணிக்கும் 10 மணிக்கும் இடையில் புயல் கரையை கடக்கும். திருகோணமலைக்கும் பருத்தித்துறைக்கும் இடையில், முல்லைத்தீவிற்கு நெருக்கமாக புயல் கரையை கடக்கவுள்ளது.இன்று காலை 8.30 மணி நிலவரப்படி, திருகோணமலைக்கு கிழக்கு, தென்கிழக்கு திசையில் 200 கிலோமீற்றர் தொலைவில் புயல் மையம் கொண்டிருந்தது.