யாழ்.பொன்னாலைக் கடலில் எச்சரிக்கையை மீறி தொழிலுக்கு சென்ற மீனவர் மாயம்..!!

பொன்னாலைக் கடலில் கடல் தொழிலுக்கு சென்ற தொழிலாளி ஒருவர் காணாமல் போயுள்ளார்.சுழிபுரம் பெரியபுலோவை சேர்ந்த செல்வராசா செல்வக்குமார் (37) என்ற 4 பிள்ளைகளின் தந்தையே நேற்றிரவு 8 மணியளவில் காணாமல் போயுள்ளார். பிரதேச மக்களும் தொழிலாளர்களும் இணைந்து இவரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கடற்படையின் உதவி கோரப்பட்டுள்ளது.சம்பவ இடத்திற்கு வலி.மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் மற்றும் பொன்னாலை வட்டார உறுப்பினர் மற்றும் பொன்னலை கிராம சேவையாளர் ஆகியோரும் பிரசன்னமாகியுள்ளனர். பிரதேச மக்களும் தொழிலாளர்களும் இணைந்து தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் கடற்படையின் உதவி கோரப்பட்டுள்ளது.தொடர்ந்தும் தேடுதல் பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.