யாழ் மாநகர சபை வரவு செலவுத் திட்டம் தோல்வி..!! கவிழ்ந்தது கூட்டமைப்பு!

யாழ் மாநகரசபையின் வரவு செலவு திட்டம் தோல்வியடைந்தது.யாழ் மாநகரசபையின் 2021ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் இன்று சமர்ப்பிக்கப்பட்டது. இதன்போது, வாக்கெடுப்பிற்கு விடப்பட்டது. இதன்போது இதன்போது இரகசிய வாக்கெடுப்பை நடத்துமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு கோரியது. இதை ஈ.பி.டி.பி எதிர்த்தது.இதையடுத்து, இரகசிய வாக்கெடுப்பா, பகிரங்க வாக்கெடுப்பா என்பதை தீர்மானிக்க நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் பகிரங்க வாக்கெடுப்பு எனத் தீர்மானிக்கப்பட்டது.இதையடுத்து வரவு செலவு திட்டத்திற்கான வாக்கெடுப்பில் ஆதரவாக 19 வாக்குகளும், எதிராக 24 வாக்குகளும் பதிவாகின.

இதனடிப்படையில் 5 மேலதிக வாக்குகளால் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டது.தமிழ் தேசிய மக்கள் முன்னணி, ஈ.பி.டி.பி என்பன எதிர்த்து வாக்களித்தன. தமிழ் தேசிய கூட்டமைப்பு, சுயேட்சைக்குழு, ஐ.தே.க உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர்.