கனடாவில் பொலிஸ் வேடத்தில் நபர் ஒருவர் மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17ஆக உயர்ந்துள்ள நிலையில், பலரின் உயிரை காப்பாற்றிவிட்டு தனது உயிரை விட்ட பெண் காவலர் குறித்து உருக வைக்கும் தகவல் வெளியாகியுள்ளது.கனடாவின் நோவா ஸ்கோடியாவின் Portapique-வில் தான் ஞாயிறு அன்று இந்த துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது.
இந்த துப்பாக்கிச்சூட்டை நடத்திய கேப்ரியல் வோர்ட்மேன் என்பவரை பொலிசார் சுட்டு கொன்றனர். தற்போது வரை இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17ஆகவுள்ளது. இந்த துப்பாக்கிச்சூடு கொரோனா லொக்டவுனில் உள்ள மக்களை பெரும் அதிர்ச்சியிலும், அச்சத்திலும் ஆழ்த்தியுள்ளது.இதில், பெண் காவலர் Heidi Stevenson-னும் ஒருவர் ஆவார்.பின்னர் மக்களின் உயிரை காப்பாற்ற தாக்குதல்தாரியை எதிர்த்து அவர் போராடியிருக்கிறார். அப்போது தான் Heidi Stevenson சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
Devastating to hear Cst. Heidi Stevenson was lost in the despicable act of violence in Nova Scotia today.
A mother to 2 children & 23-year peace officer who laid down her life to protect others
May we never take for granted the sacrifices made by law enforcement to keep us safe pic.twitter.com/pU1l7RL8Xm
— Jason Kenney (@jkenney) April 20, 2020
இரண்டு குழந்தைகளுக்கு தாயான Heidi-ன் மரணம் அவர் குடும்பத்தாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.பலரின், உயிரை காப்பாற்ற தனது உயிரை தியாகம் செய்த அவர் கனடாவின் ரியல் ஹிரோ என பலரும் சமூகவலைத்தளங்களில் புகழாரம் சூட்டியுள்ளனர். துப்பாக்கிச்சூடு குறித்து தகவலறிந்த பொலிசார், சம்பவ இடத்துக்கு வந்த நிலையில் Heidi Stevenson -னும் அங்கு வந்துள்ளார்.