சற்று முன்னர் கிடைத்த செய்தி..வடக்கின் அனைத்துப் பாடசாலைகளுக்கும் திடீர் பூட்டு..!! வடக்கு ஆளுனர் அதிரடித் தீர்மானம்..!!

வடக்கு மாகாணத்தின் அனைத்துப் பாடசாலைகளினதும் கல்வி நடவடிக்கைகள் நாளையும் நாளை மறுதினமும் தற்காலிகமாக இடைநிறுத்தப்படுகின்றது என வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம் சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். சீரற்ற காலநிலை காரணமாகவே இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகள் ஏற்கனவே மூடப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாணம், வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்ட பாடசாலைகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை வழங்கப்படவுள்ளது.மாவட்டச் செயலாளர்களால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக, வடக்கு மாகாண ஆளுநரால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.