இலங்கையில் சமூக மட்டத்தில் 35 கொரோனா தொற்றாளர்கள் புதிதாகக் கண்டுபிடிப்பு..!!

திவுலப்பிட்டிய பிரதேசத்தில் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்றுக்குள்ளான 35 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். பரவலாக மேற்கொள்ளப்பட்ட 202 கொரோனா பரிசோதனையில் இந்த கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.திவுலப்பிட்டியவில் கண்டுபிடிக்கப்பட்ட 35 பேரில் 20 பேர் சமூகத்திற்குள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக நிர்வாக பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.அந்த நோயாளிகளின் ஆரம்பத்தை கண்டுபிடிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய திவுலப்பிட்டிய சமூகத்திற்கு பாரியளவிலான கொரோனா தொற்றாளர்கள் சமூகத்தில் அடையாளம் காணப்பட கூடும் தான் நம்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.