கொழும்பில் எத்தனை பேருக்கு கொரோனா தொற்றியுள்ளது என்பதை கணித்துக் கூற முடியாது…!!விசேட மருத்துவ நிபுணர்

அண்மைக்காலமாக அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றிய நோயாளிகளில் பெரும்பாலானவர்களுக்கு ஏற்கனவே நோய் தொற்றியவர்களிடம் இருந்து இந்த வைரஸ் பரவியுள்ளதாக, தொற்று நோய்கள் தொடர்பான விசேட மருத்துவ நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். கொழும்பு மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்ட நோயாளிகள் பலருக்கு ஏற்கனவே நோய் தொற்றியவர்களிடம் இருந்து கொரோனா வைரஸ் பரவி இருப்பதே இங்கு ஆபத்தான விடயம் எனவும் அவர் கூறியுள்ளார்.நோய்த் தொற்று உள்ளானவர்களின் பின்னணியை ஆராயும் போது, இவர்கள் அதிகளவில் பயணங்களை மேற்கொள்பவர்கள் என்பதுடன் பலருடன் கலந்து பழகக்கூடிய நபர்கள்.இதனால், மேலும் எத்தனை பேருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது என்பதை சரியாக கணித்து கூற முடியாது.எவ்வாறாயினும், அனைத்து நோயாளிகளையும் அடையாளம் காண தொடர்ந்தும் பரிசோதனைகளை மேற்கொண்டு வருவதாகவும் சுதத் அமரவீர குறிப்பிட்டுள்ளார்.