உள நெருக்கடியில் உள்ளோருக்காக 24 மணி நேரம் தொழிற்படும் அபயம் அழைப்புச் சேவை யாழில் இன்று ஆரம்பம்!!

யாழ் நகரில் அபயம் அழைப்பு சேவை இன்று அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றது.யாழ்ப்ப்பாணம் தாதியர் பயிற்சிக் கல்லூரியில் மாலை 3 மணிக்கு மேற்படி நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

பல்வேறு நெருக்கடிகள் மன உளைச்சல் மற்றும் விரக்தி நிலையில் உள்ளவர்கள் சில சமயங்களில் தற்கொலைக்கு முயற்சிப்பது உண்டு. சிலர் இறந்து இருக்கின்றார்கள்.இவற்றைத் தடுப்பதற்காக 24 மணி நேர ஆலோசனை சேவையை வழங்கக்கூடிய புதிய சேவை இன்று யாழ் மக்களுக்காக அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.”அபயம் அழைப்பு சேவை” உளநெருக்கடி, விரக்தி ஏற்படுகின்ற நிலையில் தொடர்பு கொள்ளுகின்றவர்களுக்கு24 மணி நேர வைத்திய ஆலோசனை சேவை. எதிர்வரும் 15 மார்கழி தொடக்கம் சேவை முழு அளவில் நடைமுறைக்கு வரும்.071 071 2345. இன்று வைபவரீதியாக மேற்படி தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டது. மேற்படி நிகழ்வில் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் Dr. கேதீஸ்வரன் மனநல வைத்திய நிபுணர்கள் Dr. சிவயோகன் Dr.சிவதாஸ் Dr பிரேமகிருஷ்ணா Dr.சிவன்சுதன் Dr. நளாயினி Dr.கன்னங்கரா Dr. கஜந்தன் Dr.துஷ்யந்தன் மற்றும் வைத்திய அதிகாரிகள் சிரேஷ்ட தாதிய உத்தியோகத்தர்கள், உதவி பொலிஸ் அத்தியட்சகர் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர். எமது பகுதிகளில் தற்கொலைக்கு முயற்சிப்போர் மற்றும் அதனால் சாவடைவோர் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகின்றது. இவற்றில் பல இழப்புகளை உரிய ஆலோசனையின் மூலம் தவிர்க்க முடியும்.உள நெருக்கடி ஏற்படுகின்ற போது மேற்படி தொலைபேசி இலக்கத்தை தொடர்புகொண்டு ஆலோசனைகளை பெற்றுக் கொள்ள முடியும்.அபயம் நிறுவனம் இதற்கான முழு அனுசரணையும் வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.