இலங்கையின் மற்றுமொரு முக்கிய சர்வதேச விமான நிலையத்தில் விமானப்படை முகாம்..!!

மத்தள விமான நிலையத்தில் விமானப்படை முகாம் ஒன்றை அமைக்க அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளது.இதனடிப்படையில், மத்தள விமான நிலையத்திற்கு சொந்தமான 200 ஏக்கர் நிலம் இலங்கை விமானப்படைக்கு வழங்கப்படவுள்ளது.

அத்துடன் சூரியவெவ கிரிக்கெட் மைதானத்திற்கு அருகில் கிரிக்கெட் விளையாட்டுக்கான தேசிய பாடசாலை ஒன்றை ஆரம்பிப்பது தொடர்பாகவும் அமைச்சரவையில் யோசனை ஒன்று முன் வைக்கப்பட்டுள்ளது.அதற்கு அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளது. மூன்று மொழிகளில் கற்பிக்கப்படும் இந்த பாடசாலை எதிர்வரும் 2021ஆம் ஆண்டு முதல் இயங்க உள்ளது.அத்துடன் 6ஆம் ஆண்டு மாணவர்கள் பாடசாலையில் இணைத்துக் கொள்ளப்பட உள்ளனர்.இதனைத் தவிர மெய்வல்லுநர், கால்பந்து, வலைப்பந்தாட்டம் ஆகிய விளையாட்டுக்களுக்காகவும் மூன்று பாடசாலைகள் சூரியவெவவில் நிர்மாணிப்பதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளது.