வடக்கில் திடீர் சுகயீனத்திற்குள்ளான அரச உத்தியோகஸ்தருக்கு பீ.சீ. ஆர் பரிசோதனை..!!

முல்லைத்தீவை சேர்ந்த அரச ஊழியர் ஒருவர் சுகயீனம் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை மின்சார சபையின் வவுனியா அலுவலகத்தில் தொழில்நுட்ப உத்தியோகத்தாராக கடமையாற்றிவரும் ஒருவரே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.முல்லைதீவு உடையார்கட்டு பகுதியை வதிவிடமாகக்கொண்ட அந்த நபர் விடுமுறையில் அங்கு சென்றுவிட்டு கடந்த சனிக்கிழமை வவுனியாவில் உள்ள அவரது அரச விடுதிக்கு திரும்பியிருந்தார்.இந்நிலையில், தொடர்ச்சியான வயிறுப்போக்கு மற்றும் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட நிலையில், இன்றைய தினம் நோயாளர் காவு வண்டியின் உதவியுடன் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட்டுள்ளார்.
அவருக்கு கொவிட்-19 வைரஸ் பீடித்துள்ளதா என்பதை கண்டறிவதற்காக பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.