சற்று முன்னர் கிடைத்த செய்தி.. கிழக்கில் அனைத்துப் பாடசாலைகளும் நாளை முதல் பூட்டு..!!

கிழக்கு மாகாணத்தின் அனைத்துப் பாடசாலைகளும் நாளைய தினம் முதல் எதிர்வரும் வௌ்ளிக்கிழமை வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்த விடயத்தை கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தெரிவித்துள்ளார்.
தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகிய குறைந்த அழுத்த பிரதேசம் ஒரு தாழமுக்கமாக விருத்தியடைந்துள்ள நிலையில், தொடர்ந்து வரும் 12 மணித்தியாலங்களில் ஒரு சூறாவளியாக வலுவடையக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதனால், ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாகவே குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் தெரிவித்துள்ளார்.