இலங்கையில் முதல் முறையாக யாழில் அறிமுகமாகும் அதிக சத்துக்கள் நிறைந்த கருங்கோழி பிரியாணி.!! சாப்பிடத் தயாரா நீங்கள்..?

இலங்கையில் முதல் தடவையாக யாழ் தென்மராட்சி சாவகச்சேரிப் பிரதேசத்தில் உள்ள பிரபல அசைவ உணவகம் ஒன்றில் கருங்கோழி பிரியாணி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அத்துடன் திங்கட்கிழமை மட்டுமே இந்த கருங்கோழி பிரியாணி கிடைக்கும் எனவும் கூறப்படுகின்றது.

கருங்கோழியின் மருத்துவ பயன்கள்:கருங்கோழி என்பது மத்தியபிரதேச நாட்டுக்கோழி இனம் ஆகும்.சதை, ரத்தம், இரவுகள் மற்றும் அனைத்தும் கருப்பாக இருக்கும்.இவை இந்தியாவில் வளரும் நோய் எதிர்ப்பு சக்தி மிக்க, “கடக்நாத்’ என்றழைக்கப்படும் கோழியினமாகும். இக்கோழிகளின் இறைச்சி கறுப்பாக இருப்பதால், இது பிளாக் மீட் சிக்கன், காலாமாசி என்றும் அழைக்கப்படுகிறது.கருங்கோழி முட்டை:கருங்கோழி முட்டையானது கருங்கோழி போலவே கருப்பு நிறம் உடையது.கருங்கோழி ஆண்டிற்கு 120 முதல் 150 முட்டைகளை இடுவதால் இதனுடைய விலையும் சற்று அதிகமாக இருக்கும்.எல்லாம் நாட்டுக்கோழி போலவே, இதிலும் நல்ல கொழுப்புச்சத்து மற்றும் புரதம் உள்ளது. இந்த முட்டையில் அமினோ அமிலங்கள் அதிகம் உள்ளன. எனவே இது வளரும் குழந்தைகளுக்கு மிகவும் ஏற்றது .முட்டை சாப்பிடுவதால் பிரசவத்திற்கு பிறகு ஏற்படும் பிரச்சனைகளையும், ஆஸ்துமா தலைவலி போன்றவற்றைக் குணப்படுத்துகிறது.கருங்கோழி கருமை நிறத்திற்கு காரணம்:இந்தக் கோழிகள் மெலனின் என்ற நிறமி அதிகம் உள்ளது எனவே இதை உண்பதால், நரம்புகளை வலுப்படுத்தி நரம்புத் தளர்ச்சி போன்ற நோய்களுக்கு நல்ல மருந்தாக பயன்படும் என்றும் கூறுகின்றன .கருங்கோழி மருத்துவ பயன்கள் மற்றும் குணங்கள்: நாள்பட்ட நோய்களுக்கு இது மிக சக்தி வாய்ந்த மருந்தாக பயன்படுகிறது. ஏனென்றால், கோழியில் 25 சதவீதம் புரதச்சத்தும் கொலஸ்ட்ரால் 0.73 -1.05 சதவீதம் மட்டுமே உள்ளதால், இதை இதய நோய் மற்றும் இதய பாதிப்பு உடையவர்கள் சாப்பிடலாம் என்றும் மைசூரில்செயல்படும் உணவு ஆராய்ச்சி கழகம் சான்றளித்துள்ளது.இந்தக் கோழியைச் சாப்பிடுவதால் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்.இதில் பி1, பி2, பி6, பி12, சி மற்றும் , வைட்டமின் சத்துகளும் உள்ளன. இந்த கோழி இறைச்சி யுனானி மற்றும் ஓமியோபதி மருத்துவத்தில் நரம்பு தளர்ச்சியை சரிசெய்ய பயன்படுத்தப்பட்டு வருவதாக கூறுகிறார்கள்.