இலங்கையை ஊடறுத்துச் செல்லப் போகும் சூறாவளி..கிழக்கு வாழ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அபாய எச்சரிக்கை..!!

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகிய குறைந்த அழுத்தப் பிரதேசம் ஒரு தாழமுக்கமாக விருத்தியடைந்து திருகோணமலைக்கு தென்கிழக்காக ஏறத்தாழ 750 கி.மீதூரத்தில் நிலைகொண்டுள்ளது.இத்தொகுதியானது அது அடுத்த சில மணித்தியாலங்களில் தாழமுக்கமாக விருத்தியடைந்து சூறாவளியாக வலுவடையக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

அது பெரும்பாலும் மேற்கு – வடமேற்கு திசையில் நகரக்கூடிய சாத்தியம் உள்ளதுடன், மட்டக்களப்பிற்கும் முல்லைத்தீவிற்கும் இடையே இலங்கையின் கிழக்குகரையை நாளை மாலையளவில் கடக்கக்கூடும்.இதன் காரணமாக கிழக்கு மாகாணத்தில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும்.திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.வடக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.மேல், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.வடக்கு, வடமத்திய கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் ஓரளவு மிகப்பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.