கொரோனா பீதியில் யாழில் இப்படியும் நடந்ததா..? வெளியான மறுப்புத் தகவல்..!

வேலணைப் பிரதேசத்திலுள்ள பிரபல பாடசாலை தொடர்பில் முன்னர் இணையத்தளங்களில் வெளிவந்த செய்தி தவறானது எனதற்போது தெரியவந்துள்ளது. வேறு இரு பாடசாலைகளில் இவ்வாறான சம்பவம் நடந்ததாக பெற்றோர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.

தீவக கல்வி வலயத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையென்ற பெயரில் கொரோனா அபாய நிலையை கருத்திற் கொண்டு, வேலணை கல்வி வலயத்தில் உள்ள இரு பாடசாலைகளில் மேற்கொண்டதாக  கூறப்படும் இந்த நடவடிக்கை, சுகாதார வைத்திய அதிகாரிகளின் ஆலோசனையுடன் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை. இந்த விவகாரம் வடக்கு நிர்வாக உயர்மட்டத்தில் முறையிடப்பட்டு, தற்போது விவாதிக்கப்பட்டு வருகிறது.கொரோனா தொற்றாளர்கள் சிலர் அண்மைக்காலத்தில் தீவகப் பகுதிகளில் அடையாளம் காணப்பட்டனர். எனினும் பல பிரதேசங்களை சேர்ந்தவர்கள் குணமடைந்து, பிரதேசங்கள் இயல்புக்கு திரும்பி விட்டன. தற்போது காரைநகர் மற்றும் வேலணை பகுதிகளில் சிலர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
source: pagetamil.com