பிரித்தானிய தமிழர்களுக்கு நல்ல செய்தி..லண்டனில் சடுதியாக வீழ்ச்சி கண்ட கொரோனா தொற்று.!!

பிரித்தானியாவிலும் மற்றும் லண்டன் நகரப் பகுதிகளிலும் கொரோனா தொற்றின் விகிதத்தில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அத்தோடு ஒரு நாளைக்கு 700 பேர் வரை இறந்து கொண்டு இருந்த நிலையில். தற்போது அது 200 ஆக குறைவடைந்துள்ளது. திடீரென கொரோனா தொற்றும் எண்ணிக்கை பெரும் அளவில் வீழ்ச்சி காண இந்த லொக் டவுனே காரணம் என்றும் கூறப்படுகிறது.

இன்னும் 2 தினங்களில் லாக் டவுன் தளர்த்தப்பட உள்ளது. இதனை அடுத்து கிருஸ்மஸ் ஷாப்பிங் என்று பிரித்தானியா களைகட்டி விட்டும்.இதனால், டிசம்பர் மாதத்தில் தொற்று மீண்டும் ஆரம்பித்து ஜனவரி பெப்ரவரி மாதம் மீண்டும் ஒரு 3ம் அலை உருவாக வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.எனவே மக்கள் தொடர்ந்தும் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது.