தொழிநுட்ப சாதனங்களின் உதவியுடன் வீட்டிலிருந்தபடியே வணிக நடவடிக்கையை மேற்கொள்வது எப்படி..? இணையத்தில் அரிய வழிகாட்டல்..!!

கொரோனா வைரஸ் காரணமாக உலகமே முடங்கிப்போயுள்ள நிலையில் நமக்கான புதிய தொழில் வாய்ப்புக்களை பெறுவது எப்படி? வீட்டிலிருந்து வேலை செய்வது நம்மாலும் முடியுமா? பங்குச்சந்தை, நாணய பெறுமதி, வேலைவாய்ப்பு இழப்பு, தனிநபர் வருமானம் என்பவவை வீழ்ச்சியடைந்துவரும் நிலையில் அடுத்து என்ன செய்ய முடியும்? கூகிள் டெக்டார்ஸ் நிறுவனம் நடாத்தும் Startup Weekend COVID-19 Edition நிகழ்வு எதிர்வரும் Friday, April 24 – 26, 2020 at 6:30 pm க்கு நடைபெற உள்ளது.உலகளாவிய ரீதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக வீடுகளுக்குள் மக்கள் முடங்கியிருக்கும் இந்த நேரத்தில் இந்த நிகழ்வு இணையத்தின் ஊடாக நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது?

யாரெல்லாம் பங்கு பற்ற முடியும்? 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் இந்த நிகழ்வில் இணைந்து கொண்டு பயனடைய முடியும்.பங்குபற்றுவதால் என்ன நன்மைகள்?இது நாள்வரை இருந்து வந்த தினசரி நடவடிக்கைகள் முடங்கியுள்ள நிலையில் Work From Home எனும் கருப்பொருளில் வீட்டிலிருந்த படி வேலை செய்தல் என்ற நடைமுறைக்கு மாறுமாறு அனைத்து நாடுகளின் அரசாங்கங்களும் கோரிக்கை விடுத்துள்ளன.வீட்டிலிருந்த படி கணினி, இணையம், மொபைல் செயலிகள் IOT சாதனங்கள் மூலம் என்னென்ன புதிய வாய்ப்புக்கள் உருவாக்க முடியும்? அவற்றினை கொண்டு புதிய தொடக்க நிலை வணிகங்களை எப்படி மேற்கொள்ள முடியும்? நமது தகவல் தொழிநுட்ப அறிவினை மாறிவரும் உலக சந்தை வாய்ப்பிற்கேற்ப எவ்வாறு உபயோகப்படுத்த முடியும்? நம் மனதில் தோன்றும் திட்டங்களை ஆலோசகர்கள், தொழிநுட்ப உதவிகள், முதலீட்டாளர்கள் போன்ற பலருடன் இணைந்து புதிய வர்த்தக நிறுவனமாக உருவாக்குவது எப்படி? போன்ற விடயங்களை இந்த நிகழ்வில் பங்குபற்றி உபயோகப்படுத்திக்கொள்ள முடியும்.தொழிநுட்ப அறிவு, கணினி கல்வியறிவு அவசியமா? – உங்களிடம் சிறந்த வணிக எண்ணங்கள் ஐடியாகள் இருக்குமாயின், தேவையான தொழிநுட்ப தீர்வுகள், கணினி வல்லுனர்களின் குழு முயற்சியில் அவற்றினை செயல்படுத்த வாய்ப்பு கிடைக்கும் என்பதால் பங்கு பற்றுபவர்களுக்கு தொழிநுட்ப அறிவு, கணினி கல்வியறிவு அவசியமற்றது.இலங்கை முழுவதிலும் இருந்து பங்கு பற்றி பயனடைய முடியும், lock down காலத்தினை உபயோகமான முறையில் பயன்படுத்திக்கொள்ளவும், புதிய வாய்ப்புக்களை தெரிந்து கொள்ளவும், உங்கள் எண்ணங்களுக்கு செயல்வடிவம் கொடுக்கவும் இந்த நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் தயாராக உள்ளனர்.

இலங்கையின் பல பகுதிகளை சேர்ந்த ஏற்பாட்டு குழுவினர், ஆலோசகர்கள் தகவல் தொழிநுட்ப வல்லுனர்கள், தொழில் முனைவோர் இணைந்து இந்த நிகழ்வினை நடத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.மூன்று நாட்கள் நடைபெற உள்ள இந்த நிகழ்வு புதிதாக கலந்து கொள்பவர்களுக்கு பதிய பல வாய்ப்புக்களை திறந்து விட காத்திருக்கின்றது. கூகிள் டெக்டார்ஸ் நிறுவனம் உலகளாவிய ரீதியில் நடத்திவரும் இந்த நிகழ்வானது இது வரை நூற்றுக்கணக்கான புதிய தொடக்கநிலை வணிகங்களை உருவாக்கி பல தொழில் முனைவோர்களுக்கு வாய்ப்பளித்துள்ளது.பின்வரும் இணைப்பினை க்ளிக் செய்து இந்த நிகழ்வில் பங்குபற்ற எங்களை முற்பதிவு செய்து கொள்ளுங்கள்.

இந்த இணைப்பில் அழுத்தி உங்களை பதிவு செய்யுங்கள்….