யாழ் உரும்பிராயில் வீட்டுக் கிணற்றடியில் கார்த்திகை தீபம் ஏற்றச் சென்ற முதியவருக்கு நேர்ந்த சோகம்..!!

உரும்பிராய் கிழக்குப் பகுதியில் தனது தோட்ட கிணற்றுக்கு அருகில் கார்த்திகை தீபம் ஏற்ற சென்ற வயோதிபர் ஒருவர் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் மூத்தண்ணை என அழைக்கப்படும் 60 வயதான முதியவர் ஒருவர் ஒருவரே கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார்.கிணற்றடியில் தீபம் ஏற்றுவதற்காக சென்றிருந்தவரை, நீண்ட நேரமாக காணாத நிலையில் அவரைத் தேடிச் சென்றபோதே அவர் கிணற்றில் விழுந்து இறந்தமை தொியவந்துள்ளது. சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.