பனையிலிருந்து தவறி விழுந்த இரு குழந்தைகளின் தந்தைக்கு நேர்ந்த சோகம்..!!

யாழ்.உயரப்புலம் பகுதியில் பனை மரத்திலிருந்து தவறி விழுந்த இரு குழுந்தைகளின் தந்தை பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். உயரப்புலம் இளவாலை பகுதியைச் சேர்ந்த அம்பலவாணர் சிவகுமார்(வயது 43)என்ற இரு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இளவாலைப் பகுதியில் உள்ள பனைமரத்தில் கள்ளு சீவுவதற்காக கடந்த 17 ஆம் திகதி குறித்த குடும்பஸ்தர் மரம் ஏறியுள்ளார்.பனை மரத்தின் வட்டுக்குள் இருந்து கள்ளு சீவிக் கொண்டு இருந்தபோது கால் சறுக்கி பனை மரத்திலிருந்து கீழே விழுந்துள்ளார்.மயக்கமடைந்த நிலையில் உடனடியாக தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று மதியம் இறந்துள்ளார். இந்த இறப்பு தொடர்பான விசாரணைகளை, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டுள்ளார்.