தனிமைப்படுத்தலில் 10 மருத்துவர்கள்! இருவருக்கு கொரோனா தொற்று..!!

கொரோனா வைரஸ் காரணமாக 10 மருத்துவர்கள் தம்மை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்திக்கொண்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த தகவலை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பிரதிச் செயலாளர் நவீன் டி சொய்சா வெளியிட்டுள்ளார்.இந்த மருத்துவர்களில் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாகவும் அவர்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.