நாட்டில் கொரோனா தொற்றினால் மேலும் எழுவர் உயிரிழந்துள்ளனர்.இந்த நிலையில், கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 116ஆக அதிகரித்துள்ளது.
கொழும்பு 2 பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதான பெண் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் முல்லேரியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார். சுவாசப்பை பிரச்சினை மற்றும் கொவிட், நியூமோனியா காரணமாக இவர் உயிரிழந்துள்ளார்.கொதடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதான ஆண் ஒருவர் வீட்டிலேயே கடந்த 27ம் திகதி உயிரிழந்துள்ளார். நீரிழிவு, சுவாசப்பை பிரச்சினை மற்றும் கொவிட், நியூமோனியா காரணமாக இவர் உயிரிழந்துள்ளார்.

மொரட்டுவ பிரதேச்தைச் சேர்ந்த 73 வயதான ஆண் ஒருவர் ஹோமகம வைத்தியசாலையில் இன்று உயிரிழந்துள்ளார். கொவிட், நியூமோனியா காரணமாக இவர் உயிரிழந்துள்ளார்.சிலாபம் பிரதேசத்தைச் சேர்ந்த 70 வயதான ஆண் ஒருவர் சிலாபம் வைத்தியசாலையில் இன்று உயிரிழந்துள்ளார். நீரிழிவு, இரத்த அழுத்தம் மற்றும் கொவிட், நியூமோனியா காரணமாக இவர் உயிரிழந்துள்ளார்.

அக்குரஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்த 51 வயதான பெண் ஒருவர் ஹோமகம வைத்தியசாலையில் வைத்து கடந்த 27ம் திகதி உயிரிழந்துள்ளார். சிறுநீரக நோய் மற்றும் கொவிட், நியூமோனியா காரணமாக இவர் உயிரிழந்துள்ளார்.கொழும்பு 13 பிரதேசத்தைச் சேர்ந்த 90 வயதான பெண் ஒருவர் ஹோமகம வைத்தியசாலையில் வைத்து இன்று உயிரிழந்துள்ளார்.

கொவிட், நியூமோனியா காரணமாக இவர் உயிரிழந்துள்ளார்.மருதானை பிரதேசத்தைச் சேர்ந்த 78 வயதான ஆண் ஒருவர் கடந்த 27ம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்தார். கொவிட் மற்றும் சுவாசப்பிரச்சினை காரணமாக இவர் உயிரிழந்துள்ளார்.சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுக்கு அமைய இந்த தகவல்களை அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.