சற்று முன்னர் யாழ் காங்கேசன் கடலில் நடந்த பெரும் சோகம்..குளிக்கச் சென்ற இளைஞர்களை அள்ளிச் சென்றது பெரும் அலை..!!

வலி வடக்கு தையிட்டி பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் இருவர் கடலில் குளிக்கச் சென்ற போது அலையில் சிக்கி காணமல் போயுள்ள நிலையில் அவர்களைத் தேடும் பணியில் அப்பகுதியைச் சேர்ந்தவர்களும், கடற்படையினரும் ஈடுபட்டு வருகின்றனர்.இது குறித்து மேலும் தெரியவருவதாவது;
வலிகாமம் வடக்கு பகுதிக்குட்பட்ட பலாலி பொலிஸ் பிரிவு, தையிட்டியைச் சேர்ந்த 19 வயது இளைஞர்கள் இருவர் கடல் குளிக்கச் சென்ற போது அலையில் சிக்கி காணாமல் போயுள்ளனர்.
இவ் அனர்த்தத்தில் தையிட்டி தெற்கு, தையிட்டியைச் சேர்ந்த சிவச்சந்திரன்-நிரோசன் மற்றும் மாசிலாமணி-தவச்செல்வம் ஆகிய 19 வயது இளைஞர்களே அலையில் சிக்கி காணாமல் போயுள்ளதாக பலாலி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு அலையில் சிக்கி காணாமல் போயுள்ள மாசிலாமணி-தவச்செல்வம் என்ற இளைஞருக்கு திருமணமாகி 10 நாட்களே ஆகியுள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.