ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்னர் பொதுமக்களை கண்காணிக்கத் திட்டம்..!! வெளியான முக்கிய தகவல்..!

நாட்டில் ஏற்பட்டிருக்கும் தற்போதைய பொருளாதார நெருக்கடியில் சில மாவட்டங்களுக்கான ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டதன் பின்னர் மக்களின் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கு ஒரு சிறப்பு செயல்பாட்டு மையம் நிறுவப்படவுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.கொழும்பு ஊடகம் ஒன்றுக்குத் தகவல் வழங்கிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.நாட்டில் கொரோனா அச்சம் இன்னமும் நீங்கவில்லை என முன்னதாக அவர் தகவல் வெளியிட்டிருந்தார். இந்நிலையில், பொருளாதார நெருக்கடி நிலையினை சமாளிப்பதற்காகவே ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தகவல் வெளியிட்டிருக்கிறது.இந்தநிலையில், பொது மக்கள் சமூக இடைவெளியினை தொடர்ந்தும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், அரசாங்கம் வலியுறுத்தும் செயல்பாடுகளை தொடர்ந்தும் மக்கள் பின்பற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.