அடுத்து வரும் 24 மணி நேரத்தில் வங்காள விரிகுடாவில் வரப் போகும் மாற்றம்.!!

அடுத்துவரும் 24 மணிநேரத்தில் வங்காள விரிகுடாவின் தென்கிழக்கில் குறைந்த அழுத்தப் பகுதியை உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.இதனையடுத்து இது அடுத்த சில நாட்களில் இலங்கையின் வானிலையில் பாதிப்புக்கள் இருக்கும் என்றும் எதிர்வு கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று ஊவா, மத்திய, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் ஒரு சில இடங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.இந்த மழைவீழ்ச்சி 50 மி.மீ வரை பதிவாகலாம். எனவே கடலில் பயணம் செய்வோரும், மீனவ சமூகமும் இவ்விடயம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களத்தால் அடுத்த சில நாட்களுக்கு வழங்கப்படும் எதிர்கால ஆலோசனைகள் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.

மழை நிலைமை:காங்கேசந்துறையிலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் சில இடங்களில் மாலை வேளையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

காற்று:நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது 20 – 30 கிலோமீற்றர் வரை காணப்படும்.கடல் நிலை:நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள் சாதாரண முதல் மிதமான அலையுடன் காணப்படும்.