இலங்கையில் இன்று மேலும் இரு கொரோனா மரணங்கள்!!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மேலும் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.இந்த நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 109ஆக அதிகரித்துள்ளது.

மரணங்கள் பதிவான பகுதிகள்:கொழும்பு 2 பகுதியைச் சேர்ந்த 76 வயது ஆண்,கொழும்பு 8 பகுதியைச் சேர்ந்த 96 வயது பெண் ஆகியோர் கொரோனா தொற்றுக்கு இலக்காகி இன்று உயிரிழந்துள்ளனர்.