இன்று யாழ் போதனா வைத்தியசாலை மற்றும் மருத்துவபீட ஆய்வுகூடங்களில் 400 பேருக்கு இன்று Covid-19 பரிசோதனைகள் செய்யப்பட்டது. இதில், வட மாகாணத்தைச் சேர்ந்த 2 பேருக்கும் ஏனைய பிரதேசத்தைச் சேர்ந்த 13 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது.

கிளிநொச்சியில் நீர் விற்பனை நிலையத்தில் கடமையாற்றியவர்களுக்கு நேற்றைய தினம் தொற்று உறுதிசெய்யப்பட்டது.குறிப்பிட்ட நிலையத்திற்கு பாரவூர்தி மூலம் நீரைக் கொண்டு வந்த சாரதி ஒருவர் தனிமைப்படுத்தலில் இருந்த நிலையில் இன்று அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
