கிளிநொச்சி வைத்தியசாலையில் சிலர் தனிமைப்படுத்தப்பட்டிருந்தாலும் பொதுமக்கள் அச்சமின்றி வரலாமாம்!!

வடமாகாணத்திலுள்ள வைத்தியசாலைகளில் பொதுமக்கள் அச்சமின்றி சிகிச்சைக்கு வர முடியுமென வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். அத்துடன் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

எனினும், யாரும் தனிமைப்படுத்தப்படவில்லையென கிளிநொச்சி வைத்தியசாலை பணிப்பாளர் குறிப்பிட்டதாக செய்தி வெளியாகியிருந்தது. இந்த நிலையில், கிளிநொச்சி வைத்தியசாலையில் மருத்துவர்கள் உள்ளிட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டதை வடக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார். அவர் மேலும் தகவல் வெளியிடும் போது;யாழ்ப்பாணத்தில் நேற்றையதினம் (26) மேற்கொள்ளப்பட்ட பி.சி்ஆர் பரிசோதனைகளில் 23 பேருக்கு கொவிற் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.நேற்றையதினம் யாழ் போதனா வைத்தியசாலை மற்றும் யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடங்களில் 352 பேருக்கு ஊழஎனை-19 பரிசோதனைகள் செய்யப்பட்டது.இதில் வவுனியா தனிமைப்படுத்தல் முகாமைச் சேர்ந்த 20 பேருக்கும தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் காங்கேசன்துறை கடற்படை முகாமில் தனிமைப்படுத்தலில் இருக்கின்ற 3 பேரிற்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.அத்துடன் நேற்றும், இன்றும் கிளிநொச்சியில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனை முடிவுகள் இன்று வெளியாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.அண்மையில் கிளிநொச்சியில் தொற்றாக இனங்காணப்பட்ட முதியவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் காய்ச்சலிற்காக அனுமதிக்கப்படும் போது போதிய பாதுகாப்பு நடவடிக்கையுடனேயே சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு இருந்தார்.இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவரோடு நேரடித் தொடர்பில் இருந்த மூன்று மருத்துவப் பணியாளர்களர்கள் தனிமைப்படுத்தலிலும் மேலும் 7 மருத்துவ பணியாளர்கள் சுய தனிமைப்படுத்தலிற்கும் உட்படுத்தப்படுகிறார்கள்.அவரோடு நேரடித் தொடர்புடைய உறவினர்களும் நோயாளர்களும் தனிமைப் படுத்தப்படுகிறார்கள். எனவே வட மாகாணத்திலுள்ள வைத்தியசாலைகளில் பொதுமக்கள் அச்சமின்றி சிகிச்சைக்கு வர முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.