இலங்கையில் கோவிட் 19 மரணங்களின் எண்ணிக்கையில் மேலும் உயர்வு..!! நேற்றும் மூவர் மரணம்!

இலங்கையில் கொவிட்-19 நோய்த் தொற்றினால் ஏற்பட்ட மரணங்களின் எண்ணிக்கை 99 ஆக உயர்வடைந்துள்ளது.அரசாங்கத் தகவல் திணைக்களத்தினால் இன்றைய தினம் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் மூன்று மரணங்கள் தொடர்பான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.இதன்டி, மொத்த மரணங்களின் எண்ணிக்கை 99 ஆக உயர்வடைந்துள்ளது. கொழும்பு 8 பிரதேசத்தைச் சேர்ந்த 87 வயதான ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இன்று உயிரிழந்துள்ளார். சுவாசப்பை நோய் மற்றும் கொவிட் காரணமாக ஏற்பட்ட பக்டீரியா தொற்று என்பனவே மரணத்திற்கான காரணங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.பம்பலப்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த 80 வயதான ஆண் ஒருவர் முல்லேரியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார். இரத்த அழுத்தம் மற்றும் நியூமோனியா, கொவிட் காரணமாக இவர் உயிரிழந்துள்ளார்.

பெஹலியகொட பிரதேசத்தைச் சேர்ந்த 73 வயதான பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கடந்த 23ம் திகதி அவர் உயிரிழந்துள்ளார். இரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் கொவிட் காரணமாக இவர் உயிரிழந்துள்ளார்.இதேவேளை, இலங்கையில் கொவிட்-19 நோய்த் தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் இன்றைய தினம் உயர்வடைந்துள்ளது.இறுதியாக கிடைக்கப் பெற்ற பீ.சீ.ஆர் பரிசோதனை முடிவுகளின் பிரகாரம் மேலும் 211 பேருக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது.இதன்படி இன்றைய தினம் இதுவரையில் 553 பேருக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது. இந்நிலையில், நாட்டில் கொவிட் தொற்றுக்கு இலக்கான மொத்த எண்ணிக்கை 22,022 ஆக உயர்வடைந்துள்ளது.