15 வயது ஜப்பானியச் சிறுமியுடன் இலங்கைக்கு தப்பிவந்த இளைஞன் பொலிஸாரால் கைது..!!

ஜப்பானின் கோடீஸ்வர தனவந்தர் ஒருவரின் 15 வயது மகளுடன் இலங்கைக்கு தப்பி வந்து, 8 மாதங்களிற்கு மேலாக தலைமறைவாக இருந்த இளைஞனை கொச்சிக்கடை பொலிசார் நேற்று (25) கைது செய்தனர். 20 வயது இலங்கை காதலனும், 15 வயது ஜப்பானிய காதலியும் மாரவிலவில் உள்ள, இளைஞனின் அத்தையின் வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டனர்.கைது செய்யப்பட்ட 15 வயது சிறுமி ஆறு மாத கர்ப்பிணி என்பது தெரியவந்துள்ளது.இலங்கை இளைஞன் உயர்கல்விக்காக ஜப்பான் சென்றிருந்தார். பணத் தேவைக்காக அங்குள்ள தொழிலதிபர் ஒருவரின் வீட்டில் பணிக்கு சேர்ந்துள்ளார். தொழிலதிபரின் ஒரே மகளான 15 வயது சிறுமியுடன் காதல் கொண்டார்.காதல் விவகாரத்தை அறிந்த சிறுமியின் தாயின் எதிர்ப்பால் இருவரும் மார்ச் 13 அன்று நாட்டை விட்டு வெளியேறினர்.அவர்கள் ஜப்பானில் இருந்து தப்பிக்கிறார்கள் என்பதை அறிந்ததும், தனது மகள் கடத்தப்படுவதாகவும், அவர் வெளியேற அனுமதிக்கக் கூடாது என்றும் அவர் பெயரிடும் ஒருவரிடம் மகளை விமான நிலையத்தில் ஒப்படைக்கப்பட வேண்டும் என்றும் சிறிலங்கன் ஏயார்லைன்ஸுக்கு சிறுமியின் தாயார் தகவல் கொடுத்தார்.

இருவரையும் கட்டுநாயக்க விமான நிலைய பொலிசாரிடம், சிறிலங்கன் ஏயார்லைன்ஸ் ஒப்படைத்தது. எனினும், தனது காதலனுடன் செல்ல விரும்புவதாக சிறுமி கூறியிருந்தார். அந்த சமயத்தில், இலங்கையில் உள்ள ஜப்பானிய தூதரகத்தின் அதிகாரி ஒருவர் வந்து சிறுமியை பொறுப்பேற்று, கொச்சிக்கடையில் உள்ள ஒரு ஹோட்டலில் சிறுமியை தங்க வைத்தார். அத்துடன், சிறுமிக்கு துணையாக காதலனின் சகோதரியையும் தங்க வைத்தனர்.காதலன் மறுநாள் ஹோட்டலுக்கு வந்து சிறுமியை அழைத்துக் கொண்டு தப்பிச் சென்றார். மார்ச் 15 ஆம் திகதி, சிறுமியின் தாயார் இலங்கை வந்து பொலிசில் புகார் அளித்திருந்தார்.அன்றிலிருந்து இருவரும் பல்வேறு பகுதிகளில் தலைமறைவாக வாழ்ந்து வந்துள்ளனர்.கொச்சிக்கடை பொலிசார் அவர்களின் புகைப்படங்களை வெளியிட்டதை தொடர்ந்து, உள்ளனர், நேற்று (25) அவர்கள் குறித்து தகவல் கிடைத்தது.