மட்டுநகர் வீட்டுக்குள் திடீரென நுழைந்த அழையா விருந்தாளி.!!

மட்டக்களப்பு – களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிராமத்திலுள்ள வீடு ஒன்றில் 10 அடி நீளம் கொண்ட முதலை இன்று காலையில் உள்நுழைந்துள்ளது. இதனை, அடுத்து பொதுமக்களின் உதவியுடன் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் அதனை மடக்கி பிடித்து எடுத்துச் சென்றுள்ளனர்.குறித்த வீட்டிற்குள் இன்று காலை 8.30 மணியளவில் இந்த முதலை நுழைந்ததை அடுத்து வீட்டில் உள்ளவர்கள் பீதி அடைந்துள்ளனர்.