கண்டி மத்திய சந்தை வர்த்தகர்கள் 8 பேருக்கு கொரோனா!

கண்டி மத்திய சந்தையின் காய்கறி வர்த்தகத்தில் ஈடுபடும் 8 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதையடுத்து, மத்திய சந்தை இன்று (26) முழுமையாக மூடப்பட்டு, கிருமி நீக்கம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.மத்திய சந்தையில் சில தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதையடுத்து, சந்தையில் வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களிடம் நடத்தப்பட்ட பிசிஆர் சோதனையில் 8 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டனர்.அடையாளம் காணப்பட்டவர்கள், கண்டி நகரத்திற்கு வெளியில் வசிப்பவர்கள். அவர்களின் தொடர்பாளர்களை அடையாளம் காணும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.