இலங்கையில் 21000 ஐ கடந்தது கொரோனா தொற்று!! இதுவரை 94 பேர் மரணம்..!!

இலங்கையின் கொரோனா தொற்று எண்ணிக்கை இன்று 21,000 ஐ தாண்டியது.இன்று நாட்டில் 502 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நாட்டில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 21,469 ஆக அதிகரித்துள்ளது.

இன்று அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்கள் அனைவரும் மினுவாங்கொட-பேலியகொட கொத்தணியுடன் தொடர்புடையவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.நாட்டின் இரண்டாவது கொரோனா அலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17,938 ஆக உயர்ந்தது.11 வெளிநாட்டவர்கள் உட்பட 5,928 நபர்கள் தற்போது நாடு முழுவதுமுள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இன்று 485 கொரோனா தொற்றாளர்கள் குணமடைந்து வீடு திரும்பினர்.இதன்மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 15,447 ஆக உயர்ந்தது.கொரோனா தொற்று சந்தேகத்தில் 577 பேர் கண்காணிப்பில் உள்ளனர். கொரொனா தொற்றினால் 94 பேர் உயிரிழந்துள்ளனர்.