நிவர் புயலைத் தொடர்ந்து வங்கக் கடலில் உருவாகும் இன்னுமொரு புயல்..!!

நிவர் புயலைத் தொடர்ந்து வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த தகவலை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

வங்க கடலில் உருவான நிவர் புயல் நேற்று மாலை அதிதீவிர புயலாக வலுவடைந்தது. இதனையடுத்து நேற்று மாலை மணிக்கு 16 கிலோமீட்டர் வேகத்தில் கரையை நோக்கி நகர்ந்தது. புதுச்சேரிக்கு வடக்கே மரக்காணம் அருகே இரவு 11.30 மணி முதல் அதிகாலை 2.30 மணி வரை புயல் கரையை கடந்தது.அப்போது புதுச்சேரி உள்பட சில பகுதிகளில் மணிக்கு 120 முதல் 140 கிலோமீட்டர் வரை பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.இந்த நிலையில், மத்திய தெற்கு வங்கக்கடலில் வரும் 29ம் திகதி மற்றொரு காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகிறது என இந்திய வானிலை ஆய்வு மையத்தின் முன்னறிவிப்பில் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது வந்துள்ள புயல், வெள்ளத்தால் மக்கள் மீளமுடியாமல் சிரமப்பட்டு வரும் நிலையில், இந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.