யாழ் பருத்தித்துறையில் வெள்ளத்தினால் நிர்க்கதியான பொதுமக்களுக்கு கரம் கொடுத்த சட்டத்தரணி மணிவண்ணன் குழுவினர்..!!

வடமராட்சி , பருத்தித்துறை பகுதியில் வெள்ளத்தால் 100 குடும்பங்கள் பாதிக்கப்பட்ட நிலையில் , சுமார் 20க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வீடுகளில் இருந்து இடம்பெயர்ந்துள்ளனர்.பருத்தித்துறை ஓடக்கரை ஜே/402 கிராம சேவையாளர் பிரிவில் வசிக்கும் 100 குடும்பங்கள் மழையினால் வெள்ள பாதிப்பை எதிர்கொண்டு பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 50ற்க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடுமையாக பாதிப்படைந்த நிலையில் சுமார் 20 ற்கும்  மேற்பட்ட குடும்பங்கள் தமது வீடுகளில் இருந்து வெளியேறி , உறவினர் வீடுகள், பொதுமண்டபங்கள் , பொது இடங்களில் தங்கியுள்ளனர்.அதேவேளை அப்பகுதியில் பாதிப்படைந்த மக்களுக்கு எமது பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் பரமேஸ்வரன் சுரேஷ் அவர்களின் கோரிக்கைக்கு அமைவாக முதல் கட்டமாக  வியாழக்கிழமை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும், யாழ்.மாநகர சபை உறுப்பினருமான சட்டத்தரணி வி.மணிவண்ணன், மற்றும் அக் கட்சியின் மாநகர சபை உறுப்பினர் வ.பார்த்தீபன் உள்ளிட்ட குழுவினர் சமைத்த உணவுகளை மணிவண்ணன் அவர்களின் நண்பர்களின் உதவியில் வழங்கினர்.