இரு புதிய அமைச்சர்கள் ஜனாதிபதி கோட்டாபய முன்னிலையில் இன்று பதவியேற்பு.!!

உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக பதவியேற்றுள்ளார்.ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவினால் இந்த நியமனம் சற்று முன்னர் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

பொலிஸ் திணைக்களம், சிவில் பாதுகாப்பு படை மற்றும் பொது பாதுகாப்பு தொடர்பான ஒரு சில நிறுவனங்கள் முன்னதாகவே இந்த அமைச்சகத்தின் கீழ் வர்த்தமானி செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.இதேவேளை அரச பாதுகாப்பு உள்நாட்டு அலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சராக சமல் ராஜபக்ஷ சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் அவர் இன்று (வியாழக்கிழமை) சத்தியபிரமாணம் செய்துகொண்டார்.