கொரோனா அச்சத்தின் எதிரொலி..கல்முனையில் இழுத்து மூடப்படும் பாடசாலைகள்..!!

கல்முனை கல்வி வலயத்திற்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளையும் ஒரு வாரத்திற்கு மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.கிழக்கு மாகாண ஆளுநர் இதனைத் தெரிவித்துள்ளார்.அதேபோல், பாடசாலைகளை மீள ஆரம்பிக்கும் திகதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், பொத்துவில் தொடக்கம் பாண்டிருப்பு வரை உள்ள சந்தைகள் அனைத்து சந்தைகளும் இன்று மூடப்பட்டுள்ளன. அவை மீளத் திறப்பது பற்றி பின்னர்,அறிவிக்கப்படும்.அக்கரைபற்றில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதையடுத்து இன்று மாலை 6 மணி முதல் அந்தப் பகுதி முடக்கப்படுகிறது. இன்று எழுமாற்றாக அக்கரைபற்று பகுதியில் பிசிஆர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.