வெளிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் 116 பேர் இன்று அதிகாலை மீண்டும் இலங்கைக்கு!!

கொரோனா தொற்றுக் காரணமாக வெளிநாடுகளில் சிக்கியிருந்த 116 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலையத்திலுள்ள செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இதன்படி இன்று அதிகாலை 12 மணியளவில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து 42 பேரும், அதிகாலை 1.45 மணிக்கு கட்டார் – டோகாவிலிருந்து 39 பேரும், காலையில் ஓமான் – மஸ்கட்டிலிருந்து 35 பேரும் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.இவ்வாறு நாட்டை வந்தடைந்த அனைவருக்கும் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் அனைவரும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக அனுப்பப்பட்டுள்ளனர்.