ஊரடங்கு தளர்வினால் ஓரளவு இயல்பு நிலைக்கு திரும்பியது யாழ்.மாவட்டம்..!

நான்கு கிழமைகளின் பின்னர் யாழ்.மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டிருக்கும் நிலையில், வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டு மக்கள் இயல்பு வாழ்வுக்கு ஓரளவு திரும்பியிருக்கின்றனர்.

அத்தியாவசிய தேவைகளை பெற்றுக் கொள்வதற்காக பொது மக்கள் வீடுகளில் இருந்து வெளியில் வந்துள்ளனர். இவ்வாறு வீடுகளை விட்டு வெளியில் வரும் மக்களை சமூக இடைவெளி பேனவேண்டும் என்று பொலிஸ் மற்றும் இராணுவம் அறிவுறுத்தி வருகின்றன.குறிப்பாக பஸ்களில் பயணம் செய்பவர்களையும், வியாபார நிலையங்களில் பொருட்களை கொள்வனவு செய்ய வரும் பொதுமக்களும் சமூக இடைவெளி பேனுமாறு படைத்தரப்பினரால் அறிவுறுத்தப்பட்டு வருகின்றார்கள்.