நுரையீரல் உள்ள சளியை விரைவில் நீக்க சிறந்த வழி இது தானாம்.!!

கபம் என்பது ஒரு வகையான சளி. இது நுரையீரல் மற்றும் சுவாசக் குழாயில் உற்பத்தி செய்யப்படுகிறது.இது ஒருவர் நீண்ட காலம் உடல்நல குறைவால் பாதிக்கப்படும் போது கவனிக்கத்தக்க ஒன்றாக உள்ளது. ஒருவர் உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் போது கூட, உடலின் சில பகுதிகளில் சளி உருவாகிறது.இது இந்த பகுதிகளை உலர்த்தாமல் பாதுகாக்கிறது மற்றும் பாக்டீரியா மற்றும் வைரஸ்கள் போன்றவற்றிற்கு எதிராக உடலைப் பாதுகாக்க உதவுகிறது. சில வகை சளி ஆரோக்கியமான உடலுக்கு தேவைப்படுகிறது.


ஆனால் பொதுவான சளி, காய்ச்சல், மூக்கு, தொண்டை அல்லது நுரையீரலில் எரிச்சல், ஒவ்வாமை, இரைப்பை உணவுக்குழாய் ரிஃப்ளக்ஸ் நோய், புகைப்பிடித்தல் அல்லது நுரையீரல் நோய்களான நிமோனியா, சிஓபிடி நுரையீரல் புற்றுநோய் போன்றவற்றால் உடலில் சளி அதிகமாக ஏற்படலாம்.இருப்பினும் அதிகப்படியான சளியை அகற்றுவதற்கு ஒருசில வீட்டு வைத்தியங்கள் உள்ளன.இவை சுவாசிப்பதை எளிதாக்குவதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இப்போது நாம் பார்க்கப்போவது, உடலில் உள்ள அதிகப்படியான சளியை அகற்ற உதவும் சில உணவுகளைப் பற்றி தான்.
இஞ்சி-இஞ்சியில் உள்ள ஆன்டி-வைரல் மற்றும் ஆன்டி பாக்டீரியல் பண்புகள், நெஞ்சு பகுதியில் தேங்கியுள்ள சளியை எளிதில் வெளியேற்ற உதவி புரியும். அதற்கு இஞ்சியை நீரில் தட்டிப் போட்டு நன்கு கொதிக்க வைத்து, அதில் தேன் சேர்த்து, தினமும் சில முறை குடிக்க வேண்டும். இவ்வாறு குடிப்பதால், உடலில் இருக்கும் அதிகப்படியான சளி அகற்றப்படும்.
பூண்டு- உடலில் உள்ள சளியை உடைத்தெறிய உதவும் ஒரு அற்புதமான உணவுப் பொருள். பூண்டில் உள்ள ஆன்டி-மைக்ரோபியல் பண்புகள், வைரஸ், பூஞ்சை மற்றும் பாக்டீரியா தொற்றுக்களால் சுவாச சுரப்பிகளில் உருவாகும் அதிக சளியை எதிர்த்துப் போராட உதவுகின்றன. எனவே உங்கள் உணவில் அதிக பூண்டு சேர்த்துக் கொள்வது உடலில் இருந்து அதிகப்படியான சளியை நீக்க உதவும்.
அன்னாசி-அன்னாசிப்பழம் சளி பிடிக்கும் என்று பலரும் நினைப்பதுண்டு,ஆனால் அன்னாசி சளியை நீக்க உதவும் ஒரு அற்புதமான பழம். அன்னாசி சாற்றில் புரோமிலைன் என்னும் நொதிக் கலவை உள்ளது. மேலும் இதில் உள்ள சக்தி வாய்ந்த அழற்சி எதிர்ப்பு பண்புகள், ஆஸ்துமா மற்றும் அழற்சியுடன் தொடர்புடைய சுவாச பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவும். அதோடு அன்னாசி ஜூஸில் உள்ள மியூகோலைடிக் பண்புகள் சளியை முறித்து எளிதில் வெளியேற்ற உதவி புரியும்.
ஏலக்காய் உடலில் அதிகப்படியான சளி உருவாவதைக் குறைக்க உதவுகிறது. பாரம்பரியமாக ஏலக்காய் உணவு உட்கொண்ட பின் நல்ல செரிமானத்திற்கு எடுக்கப்படுகிறது. இது சளி ஜவ்வுகளைப் பாதுகாப்பதன் மூலம் உணவை எளிதில் ஜீரணிக்க உதவுகிறது. மேலும் இது ஜீரணிக்க கடினமாக இருக்கும் கனமான உணவுகளில் சளியை திரவமாக்குகிறது.