ஆசிரியரின் உறவினருக்கு கொரோனா..சுயதனிமைப்படுத்தலில் மாணவர்கள்..!!

தென்னிலங்கையில் பாடசாலை ஆசிரியர் ஒருவரின் உறவினர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஹிக்கடுவ, சீனிகம, ஸ்ரீ விமலபுத்தி மகா வித்தியாலயத்தில் கற்பிக்கும் ஆசிரியரின் குடும்ப உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.அம்பலங்கொட பிரதேசத்தில் இருந்து வருகைதந்த ஆசிரியரின் உறவினர்களுக்கு கொரோனா தொற்றியமை பீசீஆர் பரிசோதனை மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன் காரணமாக குறித்த ஆசிரியருடன் தொடர்பில் இருந்த 3 ஆசிரியர்களும் 9 மாணவர்களும் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.ஹிக்கடுவ பொது சுகாதார பரிசோதகர்கள் அந்த பாடசாலைக்கு கிருமி நீக்கம் செய்யும் நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர்.நேற்று பாடசாலைக்கு வருகைதந்த 7 மாணவர்கள் மீண்டும் வீட்டிற்கு அனுப்புவதற்கு பெற்றோர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.எனினும், இன்றைய தினம் வழமையைப் போன்று கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என குறித்த பாடசாலையின் அதிபர் குறிப்பிட்டுள்ளார்.