பெண்களிடம் பாலியல் சில்மிஷம் செய்த இளைஞர்களுக்கு கொடுக்கப்பட்ட நூதன தண்டனை.!!

வட இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தில் பெண்களிடம் பாலியல் சில்மிஷம் செய்த இளைஞர்களுக்கு போலீசாரால் நூதன தண்டணை கொடுக்கப்பட்டது. மத்திய பிரதேச மாநிலத்தில் தேவாஸ் நகரத்தில் இரண்டு இளைஞர்கள் பெண்களிடம் சில்மிஷம் செய்ததாக போலீசாருக்கு புகார் வந்தது. இதனைத்தொடர்ந்து அந்த இரண்டு இளைஞர்களை பொலீசார் கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட அவர்களை அழைத்துச் செல்லும் போது தோப்புக்கரணம் போட்டு கொண்டு செல்லுமாறு தண்டனை கொடுத்தனர். அதுமட்டுமின்றி நடந்து சென்று கொண்டிருக்கும் போதே சுற்றிலும் நின்ற போலீசார் அவர்கள் இருவரையும் அடித்துக் கொண்டே சென்றனர்.பெண்களிடம் தகாத முறையில் நடந்த இரண்டு இளைஞர்களுக்கு பொலீசார் நடுரோட்டில் தோப்புக்கரணம் போடும் தண்டனை கொடுத்தது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இந்த சம்பவத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துகள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.