போரில் உயிரிழந்த மகனை நினைவுகூர திலீபன் நினைவிடத்திற்குச் சென்ற மூதாட்டியை துருவித் துருவி விசாரணை செய்த பொலிஸார்..!!

தியாகி திலீபனின் நினைவிடத்தில் போரில் உயிரிழந்த தனது மகனை அஞ்சலிக்க முயன்ற மூதாட்டியொருவரை பொலிசாரும், இராணுவத்தினரும் துருவிதுருவி விசாரணை செய்த சம்பவம் இன்று (25) இடம்பெற்றது.

கொக்குவிலை சேர்ந்த மூதாட்டியொருவர், போரில் உயிரிழந்த தனது மகனை அஞ்சலிப்பதற்காக இன்று மதியம், நல்லூரடியிலுள்ள தியாகி திலீபனின் நினைவிடத்திற்கு சென்றுள்ளார்.அவர் அஞ்சலிக்க முயன்றபோது, அங்கு நின்ற இராணுவம், பொலிசார் அவரை மொய்த்து விட்டனர். அவரிடம் நீண்டநேரம் துருவித்துருவி விசாரணை நடத்தி பின்னரே விடுதலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது .