மாவீரர் தினத்திற்கு தடை விதிக்க கோரி வடமராட்சிப் பொலிசார் மீள மனுத் தாக்கல்!!

மாவீரர்தின நிகழ்வுகளை தடை செய்யக்கோரி பருத்தித்துறை நீதிமன்றத்தில் பொலிசார் மனு தாக்கல் செய்துள்ளனர்.வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, நெல்லியடி பொலிசார் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இன்று (25) முதல் எதிர்வரும் 27ஆம் திகதி வரை பருத்தித்துறை நீதிமன்ற நியாயாதிக்கத்திற்குட்பட்ட பகுதிகளில் அஞ்சலி நிகழ்வுகளை தடைசெய்ய மனுவில் கோரப்பட்டுள்ளது.ஏற்கனவே இந்த 3 பொலிஸ் நிலையங்கள் சார்பாகவும் சமர்ப்பிக்கப்பட்ட மனுக்களை மீள பெற்றிருந்த நிலையில், இன்று மீள மனு சமர்ப்பிக்கப்பட்டது.ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்ட வழக்கு விசாரணை இடம்பெற்ற போது, சட்டமா அதிபர் திணைக்களத்தினரை முன்னிலையாகுமாறு மூத்த சட்டத்தரணி என்.சிறிகாந்தா கோரிக்கை விடுத்திருந்தார்.சட்டமா அதிபர் திணைக்கள பிரதிநிதிகள் யாழ் நீதிவான் நீதிமன்ற வழக்கில் பங்குகொண்டுள்ளதால் இன்று மாலை விசாரணையில் முன்னலையாகலாமென எதிர்பார்க்கப்படுகிறது.