இலங்கையில் விடுவிக்கப்பட்ட பகுதிகள் மீண்டும் முடக்கப்படும் அபாயம்..இராணுவத் தளபதி விடுத்துள்ள எச்சரிக்கை!

தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டால் அவர்களால் பெருமளவானோருக்கு அச்சுறுத்தல் ஏற்படுமாயின், குறித்த பிரதேசங்களை மீண்டும் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதேவேளை நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மேலும் கொரோனா வைரஸ் கொத்தணிகள் உருவாகும் அபாய நிலை காணப்படுவதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய்ப் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.