சற்று முன்னர் பிணையில் விடுதலையானார் ரிசாட் பதியூதீன்.!!

முன்னாள் அமைச்சரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான ரிசாட் பதியூதீனுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. ஒரு இலட்சம் ரூபா ரொக்கப் பிணை மற்றும் தலா ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளின் அடிப்படையில் ரிசாட் பதியூதின் விடுதலை செய்பய்பட்டுள்ளார்.கொழும்பு கோட்டை நீதிமன்றம் இன்றைய தினம் ரிசாட்டுக்கு பிணை வழங்கியுள்ளது.

அரச சொத்துக்களை துஸ்பிரயோகம் செய்தமை மற்றும் தேர்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டின் பேரில் ரிசாட் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.இதேவேளை ரிசாட் பதியூதீன் கடந்த ஒக்டோபர் மாதம் 19ஆம் திகதி காலை தெஹிவளையில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.